Wednesday, February 5, 2014

இச்சா மரணம் - பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.

பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.

ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.

தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.

சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.

பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.

இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.

'பீஷ்ம பீஷ்ம' என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ' யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்' என்று பொருள்.

இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் - விரும்பிய பொழுது மரணம் .

சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.

இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.

விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.

ரதசப்தமி - பீஷ்மாஷ்டமி - 06-02-2014/07-02-014


Image : Internet 

No comments:

Post a Comment