Friday, June 1, 2018

பாதையும் பயணமும்

இங்கு வருகை புரிவோர் அனைவருக்கும் மிக்க நன்றி.

குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.

தொடர்ந்து வாசிக்க..
http://areshtanaymi.in/

Monday, February 20, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வியன்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  வியன்

வார்த்தைவியன்
பொருள்

·         விரிந்து பரந்த
·         பெரிய
·         வியப்புக்குரிய
·         பெருமைக்குரிய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விதிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே.

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்மாணிக்கவாசகர்

பெருமை பொருந்திய மூன்று உலகங்களுக்கும்  ஒப்பற்ற முதல்வனேநிலைபெற்ற  திருஉத்தரகோசமங்கைக்குத்  தலைவனேபோருக்கு உரிதான  மூன்று இலை வடிவினதாகிய சூலத்தை  வலப்பக்கத்தில் தாங்கி  விளங்குபவனேஇருபுறமும் எரிகின்ற கொள்ளிக்கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட  எறும்பு போன்று துயருற்று  உன்னை விட்டு நீங்கி  தலை விரிகோலம் உடையவனாகிய என்னை விட்டுவிடுவாயோ!

1.

துக்கடா
உயிர்மெய் எழுத்து - முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள்.

,ஆய்த எழுத்து, உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

இவை மேற்கூறியவாறு பத்து வகைப்படும்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முறைவன்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முறைவன்

வார்த்தைமுறைவன்
பொருள்

·         சிவபிரான்
·         பாகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அழிகின்ற தாருயிர் ஆகின்ற
    தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
    முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
    வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
    முக்கண் *முறைவனுக்கே*

பதினொன்றாம் திருமுறை

நான்கு மறைகளையும் அருளிச் செய்த,மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க் கொண்டிருக்கின்றது. அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டாகின்றது; மயக்கம் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின் மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழிகின்றன; வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன. எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

துக்கடா
யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்

எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முற்கு


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முற்கு

வார்த்தைமுற்கு
பொருள்

·         எழுத இயலா ஒலி
·         நாவாற்கொட்டும்ஒலி.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு


1.
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
     வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
          கான்கனி *முற்கியல்* கற்பக மைக்கரி ...... யிளையோனே

திருப்புகழ் - அருணகிரிநாதர்

விருப்பம் வைத்த வேட்டுவப் பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்றுமா, பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும் வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே,

துக்கடா
உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்
வல்லினம் - வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசை. (, , , , , )
மெல்லினம்  - மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசை( , , , , ,
இடையினம் - வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி  மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசை. (, , , , , )

Friday, February 17, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முடலை

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முடலை

வார்த்தைமுடலை
பொருள்

·         பெருமை
·         வலி
·         புலால்நாற்றம்
·         உருண்டை
·         முருடு
·         கழலை
·         மனவன்மை
·         திரட்சி
·         பெருங்குறடு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
நடலை இலராகி நன்(று) உணரார் ஆய
முடலை முழுமக்கள் மொய்கொள் அவையுள்
உடலா ஒருவற்கு உறுதி யுரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று.

பழமொழி நானூறு

மனத்தினுள்ளே நன்மை தீமைகளைப் பற்றிய கவலையில்லதவர்களாகி, நல்லது தீயது எவை என்பதையும் உணராதவர்களாகிய, மனவலிமையுள்ள மூடர்கள் கூடி இருக்கும் சபையினுள்ளே சென்று, உடலளவான மனிதருள் ஒருவனாக விளங்கும் ஒரு மூடனுக்கு, உறுதி தரும் பொருள் பற்றிச் சொல்லுதல் வீணானதாகும். அஃதாவது கடலுள்ளே மாங்கனியை வடித்தாற் போலும்.

துக்கடா

ஆயுத எழுத்து  மூன்று புள்ளி வடிவமாக இருப்பது  இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

Wednesday, February 15, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அமலம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அமலம்

வார்த்தைஅமலம்
பொருள்

·         மாசு அற்றது.
·         அழுக்கு இன்மை
·         தூய்மை
·         சுத்தம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலந் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலஞ்சொல் ஆணவ மாயை காமியம்
அமலந் திருக்கூத்தங் காமிடந் தானே.

10ம் திருமுறை - திருமந்திரம் – திருமூலர்

சிவன் செய்யும் திருக்கூத்தைத் திருவைந்தெழுத்தின் சீரிய முறையில் வைத்துக் கண்டால்  அனைத்தும் தூய்மை பெறும். பதி, பசு பாசங்கள் அனைத்தும் சுத்தம். கன்மங்களில் மலம் அடங்கி விடும். மாயை கன்மங்கள் அவற்றின் வழி பற்றி மறையும். மறைப்பாற்றலாகிய திரோதாயியும் திருவடியின்பம் கூட்டுவிக்கும்

துக்கடா
உயிரெழுத்துக்கள் - 12
மெய்யெழுத்துக்கள் - 18
ஆயுத எழுத்து - 1
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள்    12 X18 = 216

இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்