அஷ்டம் - எட்டு
தச - பத்து
புஜம் - கைகள்
பதினெட்டு கைகளுடன் கூடிய துர்க்கை. ஸ்ரீ மஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை என்ற பெயரும் உண்டு.
அகிலம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது அன்னையின் அருள் கருணை. அதனாலே சித்தி அடைய எண்ணுபவர்களின் முதன்மை தெய்வமாக தாய் இருக்கிறாள். (வாலை, குமரி பின் அன்னை).
அன்னைக்கு
என்று பல்வேறு வடிவங்களும் பல்வேறு ஆயுதங்களும் இருந்தாலும், அவைகளால் குறிப்பிடப்படும்
அருளள் முதன்மையானது. அது சாந்த வடிவமே என்பதற்கு சான்றாகவே இத் துர்க்கை.
வெகு சில இடங்களில் மட்டுமே 18 கைகளுடன் கூடிய இவ்வடிவம் காணப்படுகிறது.
இவ் வடிவம் சார்ந்த துர்க்கை சைவ மடங்களில் தலையானதும், முதன்மையானதும் ஆன தருமபுரத்தில்(மயிலாடுதுறையில் இருந்து 3 KM ) அமைந்துள்ளது.
மடத்திற்கு வெளியில் மற்றொரு துர்க்கை. அது வேறு துர்க்கை - வன துர்க்கை
இது 25வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாமுனியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
25வது குருமகா சன்னிதானம் அவர்கள் காளியினை நேரினில் கண்டவர்கள். அவர்கள் ஒரு முறை கல்கத்தா சென்றிருந்த போது காளி, சன்னிதானம் அவர்களிடம் நேரில் பேசி தனது கோபம் முழுவதையும் குறைத்து அருள் வழங்க எண்ணம் கொண்டதாக தெரிவித்தாள்.
அதன்படி இச்சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டு கல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது,
அன்னை வரும் போது பரிவார தேவதைகள் வரமால் இருக்குமா? அவர்களும் அன்னையுடன் புறப்பட்டார்கள். அவர்கள் அம்பாள் முன் மகா மேருவாக (32 பட்டைகளுடன்) அருள் புரிகிறார்கள்.
உத்திராட நட்சத்திரத்திற்கு பரிகார தலம்.
தற்போது திரு. ரமேஷ் குருக்கள் அவர்கள் அம்பாள் பூஜையினை கவனித்து வருகிறார்கள். (அலங்காரம் அழகாகும் வரை விடமாட்டார்). கைப்பேசி : +91-94435-91462
No comments:
Post a Comment