கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.
இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?
கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்
வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.
வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.
இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.
இவர்களின் விளக்கங்கள்
ஸ்ரீகண்டாச்சாரியார் - சமவாதி
சங்கராச்சாரியார் - விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார் - ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார் - விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார் –துவைதி
இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.
No comments:
Post a Comment