ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி
இப்பழமொழி
குறித்து சிந்தனைகள் செய்தது உண்டு.
பொது விளக்கம்.
1. ஆடம்பரமாக வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. துரோகம் செய்யும் உடன் பிறப்புக்கள்
5. பிடிவாத குணம் கொண்ட பிள்ளைகள்
தனி விளக்கம்
உடலில் செயல்கள் அனைத்தும் உயிருடனும் ஆன்மாவுடனும் ஒன்றி ஐந்து தொழில்கள் செய்யும். (காணல், கேட்டல், முகர்தல், ருசித்தல், அறிதல்). இறைவன் பஞ்ச வடிவினன். (ஈசான்யம், தத்புருஷம், அகோரம், வாமதேயம், சத்யோஜாதம்).
பெறுதல் என்பது நிகழ்த்தப்பட வேண்டுமாயின் ஒரு தருபவரும், ஒரு பெறுபவரும் இருக்கப்படவேண்டும். இரண்டுக்கும் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் இருக்க வேண்டும்.
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே
என்ற நீத்தல் விண்ணப்ப திருவாசக வரிகள் நினைவு கூறத் தக்கவை.
எனவே
தரும் நிலையில் இருக்கும் இறைவன், வினைகளின் காரணமாக அகங்காரமாக மாயைக்கு உட்பட்டு
அரசனாக இருப்பவனை அந்த நிலையில் இருந்து விலக்கி இயம்பு நிலைக்கு திரும்பச் செய்வான்.
ஐந்தொழில் புரியக்கூடிய இறைவனால் அரச கோலம்
விலகுதல் என்பது மாயை விலகுதலை குறிக்கும்.
புகைப்படம் : R.s.s.K Clicks
No comments:
Post a Comment