Thursday, April 17, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்





சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதை உண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.

நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.

சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment