தல வரலாறு(சுருக்கம்)/
சிறப்புகள்
· சிவன் சுயம்பு மூர்த்தி
· பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி
(வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
· இராமன் வழிபட்டத் தலம்
· மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி
வியாழன் தன் தவறு உணர்ந்து சிவனை வணங்கி பாவன்
நீங்கப் பெற்ற தலம்
· பிரம்மாவின் பெண்கள் கமலியும்,
வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்
· கஜ பிருஷ்ட விமானம்
தலம்
|
திருவலிதாயம்
|
பிற பெயர்கள்
|
பாடி
|
இறைவன்
|
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
|
இறைவி
|
ஜகதாம்பாள், தாயம்மை,
|
தல விருட்சம்
|
பாதிரி, கொன்றை
|
தீர்த்தம்
|
பரத்துவாஜ தீர்த்தம்
|
விழாக்கள்
|
சித்திரை - பிரம்மோற்ஸவம், தை - கிருத்திகை, குரு பெயர்ச்சி
|
மாவட்டம்
|
சென்னை
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 7 மணி முதல் 12 மணி
வரை
மாலை 4.30 மணி முதல் இரவு
8.30 மணி வரை
அருள்மிகு
திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,
பாடி, சென்னை
- 600050.
+91-44 -2654 0706
|
பாடியவர்கள்
|
திருஞானசம்மந்தர், அருணகிரியார்
|
நிர்வாகம்
|
இந்து சமய அறநிலையத்துறை
|
இருப்பிடம்
|
சென்னை 'பாடி'க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில்
இருந்து மிக அருகில்
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் 254வது
தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
|
திருவல்லீஸ்வரர்
தாயம்மை
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 003
திருமுறை
எண் 1
பாடல்
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
பொருள்
பல சிவனடியார்களும்
பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல்
மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள். அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும்
வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.
வலிதாயத்தை
மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.
கருத்து
பத்தர் -
சிவன் அடியார்காள்
பொலியம்மலர் - பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி - நீர் இட்டு
பிரியாதுறை
கின்ற - உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 1ம் திருமுறை
பதிக எண் 003
திருமுறை
எண் 8
பாடல்
கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
பொருள்
திருபாற்கடலைக்
கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி,
வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த
இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான
வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம்
என்ற நிலையை நீக்கும்.
Photo : Dinamalar
No comments:
Post a Comment