மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை.
குட்டி 'அம்மா, ஒரு கத சொல்லேன்'
அம்மா 'அன்னைக்கு ஒடினல, இப்ப ஏன் கத கேக்கற'
குட்டி 'சரிம்மா. ஒரு டாக் கத, ஒரு எலிஃப்னெட் கத சொல்லு'
அம்மா 'ஒரு ஊர்ல ஒரு ரிஷி இருந்தாராம்.
குட்டி 'பெரிய தாடி வச்சிகிட்டா?'
அம்மா 'குறுக்க பேசாத,அவர்கிட்ட ஒரு நாய் இருந்துதாம்'
குட்டி 'ஜிம்மி மாதிரியா'
அம்மா 'குறுக்க பேசாத, பேசினா கத சொல்ல மாட்டேன்'
குட்டி 'சரி'
அம்மா 'நாய் ரொம்ம சாதுவாம். சமத்தா சாப்பிடுமாம், சமத்தா தூங்குமாம். அவருகிட்கவே இருக்குமாம்'
குட்டி 'ம்'
அம்மா 'ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும் அப்டின்னு சொல்லுச்சாம்'
குட்டி 'ம்'
அம்மா 'அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்'
குட்டி 'ம்'
அம்மா 'வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்'
குட்டி 'ம்'
அம்மா 'இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம்.
அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ' நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது'
உடனே ரிஷி மேல பாய போச்சாம்.
ரிஷி சொன்னாராம், ' உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ'
அதற்குள் குட்டி உறங்கி இருந்தாள்.
ரிஷி - அக்னிப்ரபர்

No comments:
Post a Comment