Thursday, September 11, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 7/25 லிங்கோத்பவர்


வடிவம்
·   உருவம் அற்ற திருமேனியை உருவ வழிபாடு கொள்ளச் செய்யும் வழிபாடு முறை
·   மகா சிவராத்ரியுடன் தொடர்புடையது
·   திருருவத் திருமேனி - அண்ணாமலையார் வடிவம்
·   அக்னி பிழம்புகள் இயல்பாய் மேல் நோக்கி
·   வளர்ந்த ஜடா முடி
·   கரம் - மான, மழு, வரத கரம்
·   மூர்த்தத்தின் நடுவில் நெருப்பு
·   வலப்புறம் அன்ன வடிவில் ப்ரம்மா,
·   இடப்புறம் பன்றிவடிவில் திருமால்

வேறு பெயர்கள்

லிங்கோற்பவர்
திருவிலங்கம்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

  • ஜலநாத ஈஸ்வரர், திருவூறல், (தக்கோலம்)
  • திருமெய்ஞானம் - தஞ்சை மாவட்டம்
  • தேவிகாபுரம், பெரியநாயகி அம்மன் கோயில்,ஆரணி வட்டம் -  திருவண்ணாமலைமாவட்டம்
  • ஏகாம்பரநாதர் கோவில் – காஞ்சிபுரம்
  • திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)
  • திருகோடிக்காவல்
  • முக்தீஸ்வரர் ஆலயம், - மதுரை -  அன்னமும், பன்றியும் தோற்ற பிறகு சுயம் உணர்ந்து தாளில் இருக்கும் வடிவம்
  • சத்யகிரி சிவ குகை – திருமயம்
  • நல்துணை ஈஸ்வரம் - புஞ்சை
  • ப்ரம்மபுரீஸ்வரர் – புள்ளமங்கை
  • ப்ரஹதீஸ்வரர் – தஞ்சாவூர்
  • திருபுவனம்
  • ஸ்ரீ சந்தரேசுவரர் கோயில் – அருப்புக்கோட்டை
  • பால்வண்ண நாதர் கோயில்  - கரிவலம் வந்தநல்லூர் -  திருநெல்வேலி மாவட்டம்
  • தாணுமாலய சுவாமி திருக்கோயில் -  சுசீந்திரம் 
  • கயிலைநாதர் கோயில் - காஞ்சிபுரம் (எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவர்)
  • மலைக் கொழுந்தீஸ்வரர் குகைக் கோயில் - குன்றக்குடி
  • கோமேஸ்வரர் ஆலயம் - பனகல், நளகொண்டா வட்டம், ஆந்திர மாநிலம் 
  • குடிமல்லூர்
  • பிள்ளையார்பட்டி
  • திருச்செட்டாங்குடி
  • நாகப்பட்டினம்
  • கூவம்
  • கூளம்பந்தல்


இதரக் குறிப்புகள்

அடி- முடி தேடிய கதை  விவரிக்கப்பட்டுள்ள நூலகள்

ருக்வேதசம்ஹிதை
சரபோப நிஷத்
லிங்க புராணம்
கூர்ம புராணம்
வாயுபுராணம்
சிவ மகா புராணம்
உபமன்யு பக்த விலாசம்
மகா ஸ்காந்தம்
நாரதம்
கந்த புராணம்
அருணகிரி புராணம்
சிவராத்ரி புராணம்
அருணாசல புராணம்


உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்


Monday, September 1, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கள்ளில்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கள்ளில்

·   சிவன் - சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையார்
·   சிவன் சக்தி தெட்சணாமூர்த்தியாக
·   இடது கையினில் அமுத கலசம், ஏடு தாங்கி அம்பாளை தழுவிய கோலம்
·   பிருகு முனிவர் இக்காட்சியினை வணங்கியபடி கோலம்
·   அகத்தியருக்கு திருமண காட்சிக் கோலம் காட்டிய இடத்தில் ஒன்று
·   அகத்தியர் பூஜித்த லிங்கம்
·   திருஞானசம்மந்தருக்கு பூண்டி தலத்தில் பூஜை பொருள்களை மறையச் செய்து இத்தலத்தில் பூஜைப் பொருள்கள் காட்சி.
·   கஜபிருஷ்ட விமானம்



தலம்
திருக்கள்ளில்
பிற பெயர்கள்
திருக்கண்டலம், திருக்கள்ளம்
இறைவன்
சிவாநந்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், திருக்கள்ளீஸ்வரர்
இறைவி
ஆனந்தவல்லி
தல விருட்சம்
கள்ளில், அலரி
தீர்த்தம்
நந்தி தீர்த்தம்
விழாக்கள்
திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, திருவாதிரை, கந்த சஷ்டி.
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103.
ஊத்துக்கோட்டை தாலுகா,
திருவள்ளூர் மாவட்டம்.
+91-44 - 2762 9144. +91- 99412 22814
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை - பெரியபாளையம் சாலையில் (36 கி.மீ.,) கன்னிகைப்பேர் என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 4 கி.மீ., சென்று இத்தலத்தை அடையலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   18 வது தலம்.

சிவாநந்தீஸ்வரர்


ஆனந்தவல்லி


பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    119
திருமுறை எண்               3

பாடல்

ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

பொருள்

ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவனும், உண்ணுவதற்கு தலை ஓடு அன்றி வேறு எதுவும் இல்லாடவனும், சுடுகாட்டினைத் தவிர வேறு இடத்தை தனது இடமாக கொள்ளாதவனும் ஆகிய சிவன், பெரியோர்கள் அவன் பெருமை வாய்ந்த புகழைப்பாட கள்ளில் எனும் தளத்தில் உறைகிறான்.


கருத்து

ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான் - நடராஜ வடிவம்.
ஓடலாற் கலனில்லா னுறை பதியால் - பைரவ வடிவம்
அரவம் - பாம்பு.
கலன் - உண்கலன்.
பாடு - பெருமை.



பாடியவர்                     திருஞானசம்பந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    119
திருமுறை எண்               9

பாடல்

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென்றறிவார்கள் பேசு வாரே.

பொருள்

சிவந்த வரிகளை உடைய தாமரை மலரை இருப்பிடமாக கொண்ட பிரமனும், உலங்களை தனக்கு உரித்தானக்க அதை அளந்த பிரானாகிய திருமாலும், நினைப்பதற்கு அரியவனாகி இருக்கும் பெருமானாகிய இறைவன், கள்ளில் என்ற தலத்தில் உறைகிறான்.அவனை அறிந்தவர்கள் அவனை பெரியோன் என்று புகழ்வார்கள்.

கருத்து

வரி - செவ்வரி.
அவனை அறிந்தவர்கள் அவனை பெரியோன் என்று புகழ்வார்கள். - அவனை அறியாதவர்கள் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு.

புகைப்படம் : தினமலர் மற்றும் வலைத்தலங்கள்




சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.

எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.

வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.

ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம் - சிவாகமம்
லௌதிகம் - இகலோக வாழ்வு
வைதிகம் - காலாந்திரம்
அத்தியான்மீகம் - ஆன்ம விசாரம்
அதிமார்கம் - யோகமார்க அறிவு

காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Tuesday, August 26, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 6/25 பிட்சாடனர்

வடிவம்

·   உருவத் திருமேனி
·   தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிக்க எடுத்த திருக்கோலம்
·   பிறந்த மேனியோடு இருக்கும் கோலம்
·   சிவனுக்குரிய அனைத்து ஆபரணங்களும்.
·   இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
·   கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் 
·   தொடரும்  பூதகணம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன்
·   தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரன்
·   அருகில் ரிஷி பத்தினி
·   இடையில் சர்ப்ப மேகலை
·   முன் இடது கையில் கபாலமம்,
·   முன் வலது கை மான் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போல்
·   பின் வலத் திருக்கரத்தில்  நாகத்தைப் பிடித்தவாறு அல்லது டமரு
·   பின் இடத் திருக்கரத்தில் சூலம்
·   வலது கால் -  வீரக் கழலுடன்
·   மேனியில் அணிந்துள்ள பாம்புகள்  - யோக சாதனைகள்
·   பாதச் சிலம்பு  - ஆகமங்கள்
·   பாதுகைகள் - வேதங்கள்
·   கோலம் காட்டும் ஐந்து தொழில்கள்
Ø  உடுக்கை ஒலி -உலக சிருஷ்டி
Ø  திரிசூலம் - அழித்தல்
Ø  மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்
Ø  குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்
Ø  கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.
·   சிவனின் தத்புருஷம் முகத்தினை சார்ந்தது
·   ப்ரம்மனின் தலை கொய்ததற்காக ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக காசி சென்று அன்ன பூரணியிடம் பிச்சை ஏற்ற பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி
·   வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய பஞ்ச குணங்களில்  வசீகர மூர்த்தி
·   இதன் வேறு வடிவம் கஜ சம்ஹார மூர்த்தி

வேறு பெயர்கள்
பிச்சை உவக்கும் பெருமான்
பிச்சாடனர்
பிச்சாண்டை
பிச்சாண்டவர்
பிச்சதேவர்
பிச்சைப் பெருமான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

Ø திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு (மேலப்பெரும்பள்ளம் - வீணை ஏந்திய கோலம்) ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனி
Ø காஞ்சிக் கைலாசநாதர்
Ø திருவையாறு
Ø திருவிடைமருதூர்
Ø குடந்தை
Ø பந்தநல்லூர்
Ø திருப்பராய்த்துறை
Ø உத்தமர் கோயில்
Ø கங்கைகொண்ட சோழபுரம்
Ø திருவட்டது​றை - எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தி
Ø சிந்தாமணி - விழுப்புரம் மாவட்டம்
Ø திருவீழிமிழலை
Ø அயனீஸ்வரம் - அம்பாசமுத்திரத்திம்,  திருநெல்வேலி
Ø திருஉத்தரகோசமங்கை

இதரக் குறிப்புகள்
1.
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை வடிவங்கள்
நகாரச்சிலை
மகாரச்சிலை
சிகாரச்சிலை
வாகாரச்சிலை
யகாரச்சிலை
* முதல் எழுத்துக்கள் ஊழி முதல்வனைக் குறிக்கும் சொற்கள்

2.
காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் - கிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரை

3.
சான்றுகள்
காசியப சில்பசாஸ்திரம்,
சகளாதிகாரம்,
ஸ்ரீதத்துவநிதி
அம்சுமத்பேதாகமம்,
காமிகம்,
காரணாகமம்,
சில்ப ரத்தினம்
திருஞானசம்மந்தர் தேவாரம் - 3.100.1
கந்தபுராணம்,
திருவிளையாடற்புராணம்,
காஞ்சிப் புராணம்

4.
சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் கோலம்

5.
சோழர் கலை வடிவங்களில் முக்கிய வடிவம்

6.
பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரங்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே

பரந்த ஏழு உலகங்களையும் உண்டாக்கிய இறைவனை இரந்து பிழைப்பவன் என்று  கூறுகிறார்கள். தன்னை நினைக்கும் அடியார்கள் பிச்சை எடுத்து உண்டு தன் திருவடியை அடையச் செய்வதற்காகவே அவன் அவ்வாறு இருக்கிறான். -  திருமூலர்.

Image : saivasiddhanta.in
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்