Wednesday, November 11, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி


மகேசுவரமூர்த்தங்கள் 20/25 சரபமூர்த்தி

வடிவம்(பொது)

·   நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் கோபம் இரண்ய  சம்ஹாரத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதன் பொருட்டு  சிவபெருமான் எடுத்த அவதாரம் `சரபமூர்த்தி'
·   சரபம் என்பது மனிதன், யாளி, பட்சி, இம்மூன்றும் கலந்த உருவம். .
·   உடல் அமைப்பு  - சிம்ம முகம், சிம்ம உடல், எட்டுக்கால், எட்டுக்கை, ஆயுதமாக மான், மழு, சூலினி, ப்ரத்யங்கிரா தேவியர் – இறக்கைகள், சூரியன், சந்திரன், அக்னி -  கண்கள்,துடிக்கும் நாக்கு, தூக்கிய  காதுகள், கருடமூக்கு, நான்கு கரங்கள், எட்டு கால்கள், அதில் காந்தசக்தி கொண்ட நகங்கள்
·   உத்திர காமிகாகமத்தின்படி இவ்வடிவம் ஆகாச பைரவர்
·   சில இடங்களில் 32 கைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளார்.
·   சில இடங்களில் இம் மூர்த்தம் மகேசுவர பேதமாக குறிப்பிடப்படுகிறது.

வேறு பெயர்கள்

·         ஸ்ரீ சரபேஸ்வரர்
·         ஸ்ரீ சரப மூர்த்தி
·         புள்ளுருவன்
·         எண்காற் புள்ளுருவன்
·         சிம்புள்
·         நடுக்கந்தீர்த்த பெருமான்
·         சிம்ஹாரி
·         நரசிம்ம சம்ஹாரர்
·         ஸிம்ஹக்னர்
·         சாலுவேசர்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருபுவனம், மயிலாடுதுறை
·         தாராசுரம், கும்பகோணம்
·         ஆபத்சகாயேசுவரர் கோயில்,துக்காச்சி,கும்பகோணம்
·         தேனுபுரீஸ்வரர் ஆலயம்,மாடம்பாக்கம், சென்னை
·         ஆலய மூலவர் - ஸ்தம்ப சரபேஸ்வரர்,திரிசூலம், சென்னை
·         ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயம்,மயிலாப்பூர்
·         குறுங்காலீஸ்வரர் கோயில்,கோயம்பேடு
·         தாமல் நகர், காஞ்சிபுரம்  -  லிங்க உருவ சரபேஸ்வரர்
·         மதுரை, சிதம்பரம், காரைக்குடி –
·         சராவு சரபேஸ்வரர் ஆலயம், மங்களூர்

இதரக் குறிப்புகள்

·         16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இயற்றப்பட்ட  சரப புராணம்

புகைப்படம் : இணையம்

Thursday, November 5, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சூர்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருக்கச்சூர்

இறைவன் சுயம்பு மூர்த்தி
பாற்கடல் கடையும் பொழுது, விஷ்ணு (கச்சபம்) ஆமையாக உருவெடுத்து இத்தலத்து சிவனை பூஜை செய்து மந்தார மலையை தாங்கும் வலிமை பெற்ற தலம்.
இறைவனின் திருப்பாதங்கள் படிந்த தலம்
இந்திரனின் சாபம் நீங்க அஸ்வினி தேவர்களுக்கு மருந்து காட்டிய இடம்(மருந்தீஸ்வரர்)
சரியான மருந்தை ஒளி மூலம் காட்டிக் கொடுத்தமையினால் இருள்நீக்கி அம்பாள்.
சுந்தரரின் பசிப் பிணி போக்குவதற்காக சிவன் முதியவர் வேடம் கொண்டு (இரந்து) பிச்சை ஏற்று அவருக்கு அளித்ததால் இரந்தீஸ்வரர்
விருந்து படைத்ததால் விருந்தீஸ்வர்
நான்கு முகங்களுடன் சண்டேஸ்வரர் - சதுர்முக சண்டேசுவரர்
உபயவிட தலங்களில் ஒன்று

கஜ பிருஷ்ட விமானம்


கச்சபேஸ்வரர்



அஞ்சனாட்சி



தலம்
திருக்கச்சூர்
பிற பெயர்கள்
நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர் ஆலக்கோயில், ஔஷத கிரி, கச்சபவூர்
இறைவன்
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், அமிர்த தியாகராஜர்
இறைவி
அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள், அந்தக நிவாரணி,
தல விருட்சம்
கல்லால மரம், வேர்ப்பலா
தீர்த்தம்
ஔஷதி தீர்த்தம், கூர்ம தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை,மாசி - பிரம்மோற்ஸவம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
கச்சபேஸ்வரர் திருக்கோயில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை
மருந்தீஸ்வரர் திருக்கோயில்காலை 7 - 9 மணி வரை மட்டும்

அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில்,திருக்கச்சூர்- 603 204, காஞ்சிபுரம் மாவட்டம்
+91- 44 - 2746 4325,2746 3514,2723 3384, திரு. முரளி - +91 94453 56399
வழிபட்டவர்கள்
திருமால்
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 258 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   26 வது தலம்.

பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7
பதிக எண்                    41
திருமுறை எண்               7

பாடல்

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

பொருள்

மை பொருந்திய பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே, கங்கையையும், பிறை சந்திரனையும் தனது திருமுடி மேல் வைத்துள்ள ஐயனே, செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே, திருக்கச்சூர் ஆலக் கோயிலில் எழுந்தருளும் பெருமானே, பொய்யாக உனை ஒருவர் புகழ்ந்தால் அதனையும் ஒரு பொருளாய் கொண்டு அவர்களுக்கு உண்மையாக அருள் செய்யும்  எங்கள் பெருமானே உன்னை உண்மையாகவே நினைக்கும் அடியவர்களை நினை.

கருத்து
பொய்யே உன்னைப் புகழ்வார் - மனதில் அன்பு இன்றி பலன் கருதி புகழ்தல். இது இழிநிலை மனிதர்களுக்கு உரியது. அந்த நிலையில் இருந்தாலும் கூட  என்பதே இதன் சிறப்பு

சிவன் வேறு சக்தி வேறு என்ற பேதம் அறுபடுகிறது என்பதை கீழ்கண்ட இரு உதாரணங்களால் அறியலாம்.
1.பெரிய கண்களை உடைய உமா தேவியை தனது ஒரு பாகமாக கொண்டவனே
2.செம்மை நிறமும், வெண்மை நிறமும் கொண்டவனே
வெண்மை நிறம் சிவனாரைக் குறிப்பதாகும். செம்மை நிறம் சக்தியை குறிப்பதாகும்


பாடியவர்                  சுந்தரர் 
திருமுறை                 7 
பதிக எண்                 41   
திருமுறை எண்            8  

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.

பொருள்

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே,ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

கருத்து

செடியேன் உணர்வில்லேன் - செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உணர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

புகைப்படம் : தினமலர்


Monday, October 12, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 19/25 திரிபுராரி





மகேசுவரமூர்த்தங்கள் 20/25 திரிபுராரி

வடிவம்

·          உருவத்திருமேனி
·          பாவ நிவர்த்தி மூர்த்தம்
·  பொன்வெள்ளிஇரும்பாலாகிய மூன்று கோட்டை களையுடைய திரிபுராதியரான   தாரகாட்சன்கமலாட்சன்வித்யுன்மாலி ஆகிய  மூன்று அசுரர்கள்களை புன்சிரிப்பால் அழித்த வடிவம்அவர்களை எரித்தப்பின் ஒருவரை மத்தளம் வாசிப்பவனாகவும், மற்ற இருவரையும் வாயிற் காப்பாளனாகவும் மாற்றிக் கொண்டார்.
·          மேருவில், வாசுகிநாண், தேவர்கள்  - படைகள்சூரியசந்திரர்கள்  - சக்கரம்உலகம் - தேர் , வேதங்கள்தேர்க் குதிரைகள், விஷ்ணு - அம்பு , வாயுஅலகு, அக்கினி - அம்பின் நுனி ,பிரம்மா – தேரோட்டி
·          புரம் எரித்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருஅதிகை.

·        முப்புரம் என்பது மூன்று மலங்கள் (ஆணவம்மாயை மற்றும் கண்மம்என்று திருமந்திரம்   மூலம் அறியலாம்


வேறு பெயர்கள்

திரிபுர அந்தகர்
முப்புராரி
புரரிபு
முப்புர மெரித்தோன்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·  மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர்
·  தஞ்சைக்கோயில் கருவறை
·  திருவிற்கோலம் - திரிபுராந்தகர் கோயில் – கூவம்
·  திருநல்லம் கோணேரிராசபுரம்
·  சிதம்பரம்
·  கொடும்பாளூர் விமானம்
·  காஞ்சி கைலாசநாதர் கோயில்


இதரக் குறிப்புகள்

1.
எரியார் கணையால் எயிலெய் தவனே   - திருக்கழிப்பாலை

2.
கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலையாளி காபாலி            கழியோனி
கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடாடி காயோகி           சிவயோகி

விராலிமலை திருப்புகழ்

3.

பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளிஈர்க்கு
நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம்.

மேருவை வில்லாகவும், வாசுகியை நாணியாகவும் கொண்டு பூட்டித் திருமாலை
அம்பாகவும், வாயுவை அலகாகவும், அக்கினியை அம்பின் நுதியாகவும் படை
அமைத்துக் கொண்டு பிரமனைத் தேர்ப் பாகனாகவும் வேதங்களைத் தேர்க்
குதிரையாகவும் கொண்டு பூமியாகிய தேர்மிசை நின்று பகைவர் ஊராகிய
முப்புரம் வெந்தழியும்படி அரும்பு தலையுடைய புன்முறுவல் பூத்த
அறவோராகிய திருபுராரி திருவுருவம்.
-      காஞ்சிப் புராணம்


சைவ சித்தாந்தம், சைவம், மகேசுவரமூர்த்தங்கள், திரிபுராரி.

புகைப்படம் : இணையம்

Saturday, August 29, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 18/25 சலந்தாரி



வடிவம்(பொது)

·         சலந்தரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட வடிவம்
·         உருவத்திருமேனி
·         வாகனம் – காளை

வேறு பெயர்கள்

சலந்தராகரர்
சலந்தர சம்மார மூர்த்தி
கடல் வளர்ந்தானைக் கொன்றான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருவிற்குடி, திருவாருர்
·         மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

இதரக் குறிப்புகள்

நூல்கள்
1.
·         இலிங்க புராணம்
·         சக்ராயுதம்

2.
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே. 

3.
சிவஞானசித்தியார் பரபக்கம்
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே 
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) 
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத 
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான்.           292

4.
சலந்தர முத்திரை என்பது வாசி யோகத்தில் உள்ளது. இந்த உபதேசங்கள் சுப்ரமணியரால் அகத்தியருக்கு அருளப்பட்டது.
5
11ம் திருமுறையில்  பொன் வண்ணத் தந்தாதி பகுதிகளிலும் இவ்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
6
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே 1.132.8

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் 2.48.7

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே 3.113.2

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்த சக்கரம்  எனக்கு அருள் என்று
ன்று அரி வழிபட்ட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் 3.119.7

சம்பரற் கருளிச் சலந்தரன்வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த 3.122.2

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ 6.34.7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி 6.52.7

சமரம் மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் 6.53.2

சலந்தரனைப் பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி  6.71.1

சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் 6.73.5

உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட
ஓராழி படைத்தவன் காண்              6.76.10

அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாய் 6.86.6

சலந்தரனைத் தடிந்தோனை 6.90.9

விளிந்தெழுந்த சலந்தனை வீட்டி னானை 6.91.2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 7.16.2

சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன் நெடு மாற்கருள் செய்தபிரான் 7.98.5

சலமுடையசலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 8.272

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை 8/2. 209

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலி வேள் இவர்மிகை செகுத்தோன் 59.5

பொங்கும் சலந்தரன்   போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற் குறித் தாழிசெய் தானே 10.642

சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் 11.81

சலந்தரனார் பட்டதுவும்  தாம் 11.385

சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும் 11.491

சலந்தரனைச் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ தீந்த விறல்போற்றி-27  11.500

சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம் 11.704

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி 11.865

சலந்தரனைப் போக்க 11.913

சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் 11.920

கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய் 11.933

புகைப்படம் : இணையம்