Thursday, May 14, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சி அனேகதங்காவதம்




தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்

இறைவன் சுயம்பு மூர்த்தி
விநாயகர் வல்லபையை மணமுடித்த தலம்

குபேரன், தன் முற்பிறவி புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனாதல்,.சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தல், சிவன், குபேரனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்குதல்






தலம்
அனேகதங்காவதம்
பிற பெயர்கள்
திருக்கச்சி அனேகதங்காவதம்
இறைவன்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
தீர்த்தம்
தாணு தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 - 2722 2084
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   4 வது தலம்.


கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் 



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    010
திருமுறை எண்               7

பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே

பொருள்

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்

கருத்து

1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். 
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. 
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது
3.
அட்டமா நாகங்களை - அட்டமா சித்தி


பாடல்

புல்லி இடம்; “தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை,
அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே.

பொருள்

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது.. வீடு பேற்றை அளிக்கின்ற இறைவனை தொழுது 'உய்வோம்'  என்று எண்ணாமல் அவற்றை நிலைத்த பொருள் என்று கொண்டவர்  கோட்டைகளை அழித்தவன் உறையும் தலம் இது. உயிர்கள் இடத்து வினைகளின் பாரபட்சம் பாராமல் அவைகளின் உயிரை நீக்கும் காலனை அழிக்கும் படியாக தனது கால்களால் கொன்றவன்  வாழும் இடம். குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது இதழ்களில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடையது இத்தலம்

புகைப்படம் : தினமலர்

Thursday, May 7, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி



மகேசுவரமூர்த்தங்கள் 17/25 காலசம்ஹார மூர்த்தி

வடிவம்(பொது)

·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
·   சூலம் தாங்கிய திருக்கரம்
·   தேவியை அணைத்த ரூபம்
·   லிங்கத்தில் மேல் நின்று காலனை சம்ஹாரம் செய்யும் தோற்றம்
·   வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக தோற்றம்
·   சூலம் கீழ் நோக்கிய வடிவம்

வேறு பெயர்கள்
·         காமதகன மூர்த்தி
காலனை யுதைத்தான்


வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·         குறுக்கை, மயிலாடுதுறை
·         நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி
·         காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,கோவை மாவட்டம்

இதரக் குறிப்புகள்
1.   ஸ்வேத கேது என்கிற அரசனுக்கும் மார்கண்டேயர் போலவே நிகழ்வு. திருநெல்வேலி திருத்தலத்தில் - கூற்றுதைத்த நெல்வேலி என்கிற பெரியபுராண பாடல் (886)

2.   கால பயத்தினை நீக்கும் இறைவனில் சக்தி ''சர்வாரிட்டவிநாசினி''


புகைப்படம் : இணையம்

Monday, March 30, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – ஓணகாந்தன்தளி


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - ஓணகாந்தன்தளி

அமைவிடம் - பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்
இறைவன்  - சுயம்பு மூர்த்தி
சுந்தரரும், இறைவனில் திருவடி தரிசனமும்
ஓங்கார கணபதி விக்ரகத்தில் இருந்து 'ஓம்' என்ற ஒலி.
அசுரர்களின் தலைவன் வாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளில் ஒருவனான ஓணன்,  சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றிற்கு, தனது ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதமிருந்து பல வரங்களைப் பெற்ற இடம்.
மற்றொரு சேனாதிபதி காந்தனும் மற்றொரு லிங்கத்தைப் பூஜித்து சிறந்த வரங்களைப் பெற்ற இடம்.
ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட இடம்.

அசுரர்களின் பத்தி கண்டு சுந்தரர் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டு இறைவனை பொன், பொருள் வேண்டி பாட, அருகில் உள்ள புளிய மரம் பொன் காய்களாக மாறிய இடம்


தலம்
ஓணகாந்தன்தளி
பிற பெயர்கள்
திருவோணகாந்தன் தளி
இறைவன்
ஓணகாந்தேஸ்வரர், ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
வன்னி மரம்/புளிய மரம்
தீர்த்தம்
ஓணகாந்த தீர்த்தம் , தான் தோன்றி தீர்த்தம்
விழாக்கள்
மகா சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.30

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை,
காஞ்சிபுரம்- 631 502.
91- 98944 43108
வழிபட்டவர்கள்
ஓணன், காந்தன், சலந்தரன்.
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 235 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   3 வது தலம்.

ஜலந்தேஸ்வரர்


ஒணகாந்தேஸ்வரர்


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               1

பாடல்

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசனை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
    கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
    ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
    ஓண காந்தன் தளியு ளீரே.

பொருள்

திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே, 'நெய், பால், தயிர்’ கொண்டு உன்னை வழிபடுபவர்களின் கைகளில் பொருள் ஒன்றும் காணப்படுவது இல்லை. ஐந்து எண்ணிக்கை பற்றி நிற்கும் புலன்களால் ஆட்பட்டு, வருத்தமுற்று அச் சுழற்சியினால் அந்த துன்ப குழியில் விழுந்து, அதில் இருந்து விடுபட முழியாமல் அழுந்திப் போகும் எனக்கு உமது கழல் அணிந்த திருவடிகளைத் தொழுது பொருள் பெற்று மட்டுமே விடுபட முடியும்.அவ்வாறு அத்துன்பத்தில் இருந்து விடுபட எனக்கு வழி ஒன்றை சொல்வீராக.

கருத்து
ஐவர்  - பஞ்ச இந்திரியங்களும் அவற்றால் செய்யப்படும் தொழில்களும்
துய்ய – தூய்மையான

தம்பிரான் தோழர் என்பதாலேயே தனது நிலையையும், தன் சார்ந்து இருப்பவர்ளின் வறுமை நிலையையும் சொல்லி பொருள் கேட்டு விழைகிறார்.


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    005
திருமுறை எண்               2

பாடல்

திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு ளீரே.

பொருள்

திருவோணகாந்தன் தளி என்னும் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் பெருமானே,  'நீர் பிறை இருக்குமாறு கட்டிய சடையை உடையவர், அலைகள் தோன்றும் புரளும் கங்கை, உமா தேவிக்கு அஞ்சி என்றும் வாய் திறவாதவள். மூத்த குமாரராகிய கணபதி, வயிறு ஒன்றையே பிரதானமாகக் கொண்டவர். இளைய குமாரகிய வேலை உடைய குமரன் விளையாட்டுப் பிள்ளை. உமாதேவி உம்மை விடுத்து அடியவர்களை ஆட்கொள்ள மாட்டார். ஆதலால் உங்கள் குடிக்கு அடிமைத் தொழில் செய்ய மாட்டோம்.

கருத்து

இது இறைவனின் திருமேனி வடிவங்களயும், திரு மேனியோடு இருக்கும் உமை, கணபதி மற்றும் குமரனின் வடிவம் குறித்திப் பேசுகிறது.

நன்றி - புகைப்படம் : தினமலர்

Wednesday, February 25, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி




மகேசுவரமூர்த்தங்கள் 16/25 காமாரி

வடிவம்(பொது)

·   உருவத் திருமேனி
·   கிழக்கு முகமான தத்புருஷத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·   அழித்தல் தொழிலுக்குரியவர்
·   உமையவள் அற்று தனித்த வடிவம்
·   இடக்காலை மடித்து
·   வலக்காலைத் தொங்கவிட்டு
·   வலக்கை அபய முத்திரை
·   இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலை
·   காமனை எரித்து தகனம் செய்ததால் காம தகன மூர்த்தி
·   யோகத்தில் வெல்ல காமதகனம் அவசியம் என்பதை சூட்சமாய் உணர்த்தும் வடிவம்
·   மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருப்பார்.
·   மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து விதமாக அமைக்கலாம்.
·   சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடிய மன்மதன்
·   மாரினீ என்ற அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.

வேறு பெயர்கள்

·         காமதகன மூர்த்தி
·         சக்தி ''மோகவிக்நவிநாசினி''
·         காம அந்தக மூர்த்தி
காமனைக் காய்ந்தான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         குறுக்கை, மயிலாடுதுறை
·         கங்கைகொண்ட சோழபுரம்
·         மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
·         திருவைகாவூர், சுவாமிமலை

இதரக் குறிப்புகள்

1.
நிலத்துளங்க மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச் சப்பாணி கொட்டும் - கலந்துளங்கொள்
காமாரி ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி ஈன்ற மணி.

2.

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி ...... கழையோனி
திருப்புகழ் 577 கரிபுராரி காமாரி  (விராலிமலை)

3.
“காமாரி காமாம் கமலாஸனஸ்தாம்  - காமாக்ஷி ஸ்தோத்திரம்.  ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச் செய்கிறதே

4.
பஞ்சாட்சர சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும்  சூக்குமப்பஞ்சாட்சர தீட்சை  வரிசையில்  ய      வ     சி       ம     ந என்று அறியப்படும்.

5.

உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி பிரதிஷ்டை முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் : இணைய தளம்

Thursday, January 22, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 15/25 கங்காளர்



வடிவம்(பொது)

·   உருவத் திருமேனி
·   வாம தேவ முகத்திலிருந்து தோன்றிய வடிவம்
·   வாமனனைக் கொன்று முதுகெலும்பை தண்டமாக வைத்துக் கொண்ட வடிவம்(கங்காளம் -  முதுகு எலும்பு)
·   கங்காளம் - வாத்தியம். உடுக்கைவிட பெரியதானது. முழவை விட சிறியதானது அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். நின்ற கோலம்
·   இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியபடி இருக்கும்;
·   வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டியபடி.
·   ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம்.
·   மகிழ்ச்சி நிறைந்த முகம், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்தபடி
·   முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய்
·   இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரம்
·   நான்கு கரங்கள்
·   முன் வலக்கரம்  - பாணத்தையும்,
·   முன் இடக்கரம்உடுக்கை
·   பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தம்.
·   பின் இடக்கரத்தில் கங்காளதண்டம்அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்
·   ஆடை - புலியாடை
·   அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன்
·   திருவடியில் மரப் பாதுகைக ள்
·   உடலெங்கும் பாம்பு அணிகலன்களாக
·   அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்
·   கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.
·   இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்;
·   வருணன் நீர் தெளிப்பார்;
·   பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்;
·   முனிவர்கள் வேதம் ஓதுவர்;
·   சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்;
·   நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.

வேறு பெயர்கள்

கங்காள மூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் மாவட்டம்
·         கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் - கருந்திட்டைக்குடி (கரந்தை)
·         கங்களாஞ்சேரி , திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்
·         நாகேசுவர சுவாமி கோயில், கும்பகோணம்
·         சுசீந்திரம்,
·         தென்காசி,
·         தாராசுரம்
·         விரிஞ்சிபுரம்
·         திருநெல்வேலி


இதரக் குறிப்புகள்

#

பிட்சாடனர்
கங்காளர்
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
1
அருகில்


அம்மை
2
வலது மேல் கை
உடுக்கை
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
3
வலது கீழ் கை
மானுக்கு புல்
உடுக்கைக்குரிய கோல்
4
இடது மேல் கை
சூலம்
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
மான் மழு
5
இடது கீழ் கை
கபாலம்
உடுக்கை
6
மேனி
நிர்வாணக் கோலம்
ஆடையுடன் கூடிய  கோலம்

7
காலின் கீழ்


அந்தகாசுரன்

நூல்கள்

அம்சுமத் பேதாகமம்,
காமிகாமம்,
காரணாகமம்,
சில்பரத்தினம்

1.
'வள்ளல் கையது மேவுகங்காளமே-  திருஞானசம்பந்தர்,
'கங்காள வேடக்கருத்தர்' - திருநாவுக்கரசர்,
'கங்காளம் தோள் மேலே காதலித்தான்' - மணிவாசகர் .

2.
"குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்"

 - காஞ்சிப்புராணம்.

3
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
   இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய்
   வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

அப்பர் சுவாமிகள் தேவாரம்

4.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.

தேவாரம் - 1.130.3

5.
'கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும்' - அருணகிரிநாதர் மயில் விருத்தம்

புகைப்பட உதவி : இணையம்