மகேசுவரமூர்த்தங்கள்
16/25 காமாரி
வடிவம்(பொது)
· உருவத் திருமேனி
· கிழக்கு முகமான
தத்புருஷத்தில் இருந்து தோன்றிய வடிவம்
· அழித்தல் தொழிலுக்குரியவர்
· உமையவள் அற்று
தனித்த வடிவம்
· இடக்காலை மடித்து
· வலக்காலைத் தொங்கவிட்டு
· வலக்கை அபய முத்திரை
· இடக்கையை மடக்கிய
கால் மீது வைத்து அமர்ந்த நிலை
· காமனை எரித்து
தகனம் செய்ததால் காம தகன மூர்த்தி
· யோகத்தில் வெல்ல
காமதகனம் அவசியம் என்பதை சூட்சமாய் உணர்த்தும் வடிவம்
· மன்மதன் தேவபாகன்
வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ அல்லது இல்லாமலோ இருப்பார்.
· மன்மதனின் ஐந்து
சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து விதமாக அமைக்கலாம்.
· சுத்தமான தங்கத்தை
போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு
கூடிய மன்மதன்
· மாரினீ என்ற
அம்புகள் , வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருக்கும் வடிவமாக மன்மதன்.
வேறு
பெயர்கள்
·
காமதகன மூர்த்தி
·
சக்தி ''மோகவிக்நவிநாசினி''
·
காம அந்தக மூர்த்தி
காமனைக் காய்ந்தான்
காமனைக் காய்ந்தான்
வடிவம்
அமையப் பெற்ற திருக்கோயில்கள்
·
குறுக்கை, மயிலாடுதுறை
·
கங்கைகொண்ட சோழபுரம்
·
மீனாட்சி அம்மன் கோவில், மதுரை
·
திருவைகாவூர், சுவாமிமலை
இதரக்
குறிப்புகள்
1.
நிலத்துளங்க
மேருத் துளங்க நெடுவான்
தலத்துளங்கச்
சப்பாணி கொட்டும் - கலந்துளங்கொள்
காமாரி
ஈன்ற கருங்கைக் கடதடத்து
மாமாரி
ஈன்ற மணி.
2.
கரிபு
ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி ...... கழையோனி
திருப்புகழ்
577 கரிபுராரி காமாரி (விராலிமலை)
3.
“காமாரி
காமாம் கமலாஸனஸ்தாம்” - காமாக்ஷி ஸ்தோத்திரம். ‘மாரனை ஜெயிச்ச மஹேஸ்வரனையும் உன் சௌந்தரியம் மயங்கச்
செய்கிறதே’
4.
பஞ்சாட்சர
சக்திகளின் சூட்சுமங்களை உணர்த்தும் சூக்குமப்பஞ்சாட்சர
தீட்சை வரிசையில் ய வ சி ம ந என்று அறியப்படும்.
5.
உத்தரகாமிக
மஹாதந்திரத்தில் காலாரி பிரதிஷ்டை முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் : இணைய தளம்