Monday, February 20, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வியன்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  வியன்

வார்த்தைவியன்
பொருள்

·         விரிந்து பரந்த
·         பெரிய
·         வியப்புக்குரிய
·         பெருமைக்குரிய

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விதிதலை யேனை விடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே.

திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்மாணிக்கவாசகர்

பெருமை பொருந்திய மூன்று உலகங்களுக்கும்  ஒப்பற்ற முதல்வனேநிலைபெற்ற  திருஉத்தரகோசமங்கைக்குத்  தலைவனேபோருக்கு உரிதான  மூன்று இலை வடிவினதாகிய சூலத்தை  வலப்பக்கத்தில் தாங்கி  விளங்குபவனேஇருபுறமும் எரிகின்ற கொள்ளிக்கட்டையின் உள்ளிடத்தே அகப்பட்ட  எறும்பு போன்று துயருற்று  உன்னை விட்டு நீங்கி  தலை விரிகோலம் உடையவனாகிய என்னை விட்டுவிடுவாயோ!

1.

துக்கடா
உயிர்மெய் எழுத்து - முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள்.

,ஆய்த எழுத்து, உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

இவை மேற்கூறியவாறு பத்து வகைப்படும்

2 comments:

  1. மிக்க நன்றி. குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.
    தொடர்ந்து வாசிக்க..
    http://areshtanaymi.in/

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    வழிகாட்டும் அளவிற்கு இன்னும் இலக்கு அடையவில்லை. உங்கள் விருப்பங்களில் ஈமெயிலில் தெரிவியுங்கள். இயன்றவரை பதில் அளிக்கிறேன்.

    குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.

    தொடர்ந்து வாசிக்க..
    http://areshtanaymi.in/

    ReplyDelete