Wednesday, January 11, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மேருகிரி

ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  மேருகிரி

வார்த்தைமேருகிரி

பொருள்
  • ·         மேருமலை.
  • ·         கைலாய மலை
  • ·         யோகமார்கங்கள் வழியில் சித்திகள் கூடிவந்தப் பின் காணும் அக அருட்காட்சி


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
பண்ணப்பா சௌமியத்தை பூசைபண்ணு
பதிவான சாகரத்தை அறிந்துகொண்டு
எண்ணப்பா வென்று தன்னை மறந்திடாதே
இகபரசாதனம் முழுதும் இதுவே சித்தி
முன்னப்பா சொன்ன சாஸ்திரங்களெல்லாம்
முன்பின்னாய்ப் பூரணத்திற் சேர்க்கச் சொன்னோம்
கண்ணப்பா கண்மணிபோல் இந்த நூல்தான்
கைலாச *மேருகிரி* தீபமாச்சே

அகத்தியர் சௌமிய சாகரம்

இந்த நூல் அனைத்து சாத்திரங்களினும் உயர்ந்தது ஏனெனில் அது இக பர சித்தியை அளிக்கும்அதனால் ஒருவர் இதனைக் கற்றுத் தேர்ந்து இதைப் பூஜிக்க வேண்டும்பெற்ற சித்தியினால் தன்னிலையை மறந்துவிடக்கூடாதுகண்ணின் மணியைப் போல விளங்கும் இந்த நூல் கைலாச மேரு கிரியில் இட்ட தீபமாகும்பரவுணர்வு நிலையில் காணப்படும் பரவொளி யாகும் என்கிறார் அகத்தியர்.

2

சித்தான சித்துமுனி விநாயகன்தான்
சிறப்பான மேருகிரி தன்னிலப்பா
முத்தான பதிமூன்றாம் வரையில்தானும்
முனையான குளிகையினால் கண்டுவந்தேன்
பத்திதரும் நெடுங்கால மிருந்தசித்து
பாருலகில் சாத்திரத்தின் முதலாஞ்சித்து
வெத்திபெறும் விநாயகரின் சித்துதம்மை
வேகமுடன் *மேருவரை* பார்திட்டேனே

போகர் 7000

களைப்பே இல்லாமல் பயணம் செய்யும் குளிகை செய் முறையை வசிஷ்டரிடம் இருந்து கற்று அதைப்பயன்படுத்தி பயணம் செய்யும்போது குருவருளினால் அந்த மேருமலையில் பதின்மூன்றாம் பகுதியில் விநாயகரின் சமாதியை கண்டேன். அந்த சமாதியானது மூடப் படாமல் திறந்து இருந்தது. அங்கே அங்குசமும், ஒற்றைக் கொம்பும் யானைமுகமுமாக சமாதி நிலையில் விநாயகர் பூமியில் இருக்கக் கண்டேன். மூன்று யுகமும் கண்ட சித்தனான விநாயகர் நான்காம் யுகத்தில், உறுதியாக இரண்டு கைகளையும் ஏந்திக் கொண்டு சமாதி நிலையில் இருக்கிறார் (இந்த தகவல்களை போகர் தனது சீடரான புலிப்பாணிக்கு சொல்வதாக பாடல்கள் அமைந்திருக்கிறன).

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)


No comments:

Post a Comment