Thursday, May 14, 2015

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கச்சி அனேகதங்காவதம்




தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்

இறைவன் சுயம்பு மூர்த்தி
விநாயகர் வல்லபையை மணமுடித்த தலம்

குபேரன், தன் முற்பிறவி புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனாதல்,.சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தல், சிவன், குபேரனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்குதல்






தலம்
அனேகதங்காவதம்
பிற பெயர்கள்
திருக்கச்சி அனேகதங்காவதம்
இறைவன்
கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்
இறைவி
காமாட்சி
தல விருட்சம்
தீர்த்தம்
தாணு தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 - 2722 2084
வழிபட்டவர்கள்
பாடியவர்கள்
சுந்தரர்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 237 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   4 வது தலம்.


கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் 



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7 ம் திருமுறை 
பதிக எண்                    010
திருமுறை எண்               7

பாடல்

கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது ஏத்தும் இடம்; கதிரோன் ஒளியால்
விட்ட இடம்; விடை ஊர்தி இடம்; குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்;
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்கப்பிரானது இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே

பொருள்

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது. மும்மலங்களின் ஒன்றான மாயை(மயக்கம்) அறுத்தவர்கள் கைகளால்  தொழும் இடம் இது. கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். இறைவன் ரிஷப வாகனத்தை ஊர்தியாக கொண்ட இடம். குயில்கள் பேடைகளும் சேவல்களும் ஆடும் இடம். பூத்த மணம் வீசும் மலர்கள்களை உடைய தேவியுடம் அட்டமா நாகங்களை அணிந்த இறைவன் சேரும் இடம்

கருத்து

1.
கதிரவன் தனது ஒளி குன்றிய இடம். 
இறைவன் தன் பேரொளிக்கு முன் கதிரவன் ஒளி மங்கும் என்பது ஒரு கருத்து. 
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருப்பதால் கதிரவன் ஒளி உட்புக முடியாமல் உள்ளது என்பது மற்றொரு பொருள்.
2.
குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்புடையது
3.
அட்டமா நாகங்களை - அட்டமா சித்தி


பாடல்

புல்லி இடம்; “தொழுது உய்தும் என்னாதவர் தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம்; விரவாது உயிர் உண்ணும் வெங்காலனைக் கால் கொடு வீந்து அவியக் கொல்லி இடம் குளிர் மாதவி, மவ்வல், குரா, வகுளம், குருக்கத்தி, புன்னை,
அல்லி இடைப் பெடை வண்டு உறங்கும் கலிக் கச்சி அனேகதங்காவதமே.

பொருள்

கச்சி அனேகதங்காவதம் என்னும் இவ்விடம் பல சிறப்புகளை உடையது.. வீடு பேற்றை அளிக்கின்ற இறைவனை தொழுது 'உய்வோம்'  என்று எண்ணாமல் அவற்றை நிலைத்த பொருள் என்று கொண்டவர்  கோட்டைகளை அழித்தவன் உறையும் தலம் இது. உயிர்கள் இடத்து வினைகளின் பாரபட்சம் பாராமல் அவைகளின் உயிரை நீக்கும் காலனை அழிக்கும் படியாக தனது கால்களால் கொன்றவன்  வாழும் இடம். குளிர்ந்த வனமல்லிகை, முல்லை, குரா, மகிழ், குருக்கத்தி, புன்னை இவற்றின் மலர்களது இதழ்களில் பெண் வண்டுகள் உறங்குகின்ற, ஆரவாரத்தை யுடையது இத்தலம்

புகைப்படம் : தினமலர்

No comments:

Post a Comment