Thursday, January 22, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 15/25 கங்காளர்



வடிவம்(பொது)

·   உருவத் திருமேனி
·   வாம தேவ முகத்திலிருந்து தோன்றிய வடிவம்
·   வாமனனைக் கொன்று முதுகெலும்பை தண்டமாக வைத்துக் கொண்ட வடிவம்(கங்காளம் -  முதுகு எலும்பு)
·   கங்காளம் - வாத்தியம். உடுக்கைவிட பெரியதானது. முழவை விட சிறியதானது அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். நின்ற கோலம்
·   இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியபடி இருக்கும்;
·   வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டியபடி.
·   ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம்.
·   மகிழ்ச்சி நிறைந்த முகம், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்தபடி
·   முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய்
·   இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரம்
·   நான்கு கரங்கள்
·   முன் வலக்கரம்  - பாணத்தையும்,
·   முன் இடக்கரம்உடுக்கை
·   பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தம்.
·   பின் இடக்கரத்தில் கங்காளதண்டம்அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்
·   ஆடை - புலியாடை
·   அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன்
·   திருவடியில் மரப் பாதுகைக ள்
·   உடலெங்கும் பாம்பு அணிகலன்களாக
·   அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்
·   கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.
·   இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்;
·   வருணன் நீர் தெளிப்பார்;
·   பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்;
·   முனிவர்கள் வேதம் ஓதுவர்;
·   சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்;
·   நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.

வேறு பெயர்கள்

கங்காள மூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் மாவட்டம்
·         கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் - கருந்திட்டைக்குடி (கரந்தை)
·         கங்களாஞ்சேரி , திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்
·         நாகேசுவர சுவாமி கோயில், கும்பகோணம்
·         சுசீந்திரம்,
·         தென்காசி,
·         தாராசுரம்
·         விரிஞ்சிபுரம்
·         திருநெல்வேலி


இதரக் குறிப்புகள்

#

பிட்சாடனர்
கங்காளர்
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
1
அருகில்


அம்மை
2
வலது மேல் கை
உடுக்கை
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
3
வலது கீழ் கை
மானுக்கு புல்
உடுக்கைக்குரிய கோல்
4
இடது மேல் கை
சூலம்
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
மான் மழு
5
இடது கீழ் கை
கபாலம்
உடுக்கை
6
மேனி
நிர்வாணக் கோலம்
ஆடையுடன் கூடிய  கோலம்

7
காலின் கீழ்


அந்தகாசுரன்

நூல்கள்

அம்சுமத் பேதாகமம்,
காமிகாமம்,
காரணாகமம்,
சில்பரத்தினம்

1.
'வள்ளல் கையது மேவுகங்காளமே-  திருஞானசம்பந்தர்,
'கங்காள வேடக்கருத்தர்' - திருநாவுக்கரசர்,
'கங்காளம் தோள் மேலே காதலித்தான்' - மணிவாசகர் .

2.
"குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்"

 - காஞ்சிப்புராணம்.

3
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
   இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய்
   வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

அப்பர் சுவாமிகள் தேவாரம்

4.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.

தேவாரம் - 1.130.3

5.
'கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும்' - அருணகிரிநாதர் மயில் விருத்தம்

புகைப்பட உதவி : இணையம்

No comments:

Post a Comment